Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 15 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கடற்படைகள் செயிண்ட் லூசியா சமரில் மோதின.
1799 –இலங்கையின் முதலாவது ஆங்கில பள்ளி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.
1891 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
1905 – அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: சேர்பிய இராணுவம் பெல்கிரேடை மீண்டும் கைப்பற்றியது.
1914 – சப்பானில் மிட்சுபிசி நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
1917 –உருசியாவுக்கும் மைய நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது.
1941 –உக்ரேனின் கார்கீவ் நகரில் 15,000 யூதர்கள் நாட்சிகளினால் கொல்லப்பட்டனர்.
1960 – மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.
1967 – ஒகையோவில் ஒகையோ ஆற்றிற்கு மேலே செல்லும் வெள்ளிப் பாலம் உடைந்து வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.
1970 – சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் இறங்கியது. இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.
1970 – தென் கொரியப் பயணிகள் கப்பல் கொரிய நீரிணையில் மூழ்கியதில் 308 பேர் உயிரிழந்தனர்.
1978 – மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அரசுத்தலைவர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.
1995 – ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் 'அப்துல் ரவூஃப்' என்பவர் தீக்குளித்து இறந்தார்.
1997 – தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.
2001 – பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.
2006 – இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.
2010 – 90 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவுக்கருகில் பாறைகளுடன் மோதியதில் 48 பேர் உயிரிழந்தனர்.
2013 – தெற்கு சூடான் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
2014 – சிட்னியின் மையப் பகுதியில் உணவகம் ஒன்றில் துப்பாக்கிதாரி ஒருவர்; 18 பேரைப் பணயக் கைதிகளாகப் பிடித்தான். 16 மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இரண்டு பணயக் கைதிகளும், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டனர்.
2017 – சாவகத் தீவில், தசிக்மலாயா நகரை 6.5 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர், 36 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago