Janu / 2024 டிசெம்பர் 12 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1901 : அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிஞ்சைகளை மார்க்கோனி பெற்றார்.
1911 : இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது.
1923 : இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில், 600 பேர் கொல்லப்பட்டனர்.
1939 : குளிர்காலப் போர் - பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
1940 : இங்கிலாந்தின் செஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில், 70 பேர் கொல்லப்பட்டனர்.
1941 : இரண்டாம் உலகப் போர் - பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும் இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.
1941 : அமெரிக்கப் போர்க்கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.
1941 : யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.
1942 : நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில், 100 பேர் கொல்லப்பட்டனர்.
1948 : மலாயா அவசரகாலம் - பத்தாங்காலி படுகொலைகள் - மலாயாவில் நிலை கொண்டிருந்த இஸ்கொட்லாந்து படையினர் 14 பேர், பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
1963 , ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.
1979 : கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 ஆற அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300 – 600 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1984 : மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமது டாயா புதிய அதிபரானார்.
1985 : கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
1988 : இலண்டனில் இரண்டு ரயில்கள் மோதியதில், 35 பேர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1991 : ரஸ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1997 : களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள் - இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற்கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
1950 : தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் இன் பிறந்த தினம்

33 minute ago
42 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
49 minute ago