2024 மே 03, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 6

Freelancer   / 2023 நவம்பர் 06 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1844 -   டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.

1860 -  ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்குத் தலைவரானார்.

1918 - போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.

1935 - எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

1962 – ஐ.நா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

1963 - வியட்நாம் போர்: நவம்பர் 1 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் அதிபரானார்.

2002 -  வியன்னாவிலிருந்து பாரிஸிற்கு பயணித்த ரயில் தீவிபத்துக்குள்ளானதில் 12 பேர் கொல்லப்பட்டனர்

2004 - இங்கிலாந்து, அப்டோன் நேர்வெட் கிராமத்தில் வைத்து அதிவேக ரயில் விபத்துக்குள்ளானதில் பயணிகள் 6 பேர் பலியானதுடன் 150 பேர் படுகாயமடைந்தனர்.

2012-  கலிபோர்னியா, பிரெஸ்னோவில் உள்ள கோழிப் பண்ணையில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .