Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் இரண்டாவது கணவர் டார்ன்லி பிரபு எடின்பரோவில் குண்டுவெடிப்பில் இறந்தார்.
1763 – பாரிஸ் உடன்படிக்கை (1763): பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்துக்கு கையளித்தது.
1798 – லூயி அலெக்சாண்டர் பேர்த்தியர் உரோமைக் கைப்பற்றி அதனை பெப்ரவரி 15 இல் ரோமன் குடியரசாக அறிவித்தார்.
1815 – கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் நோக்கில் பிரித்தானியர் கண்டியினுள் நுழைந்தனர்.
1840 – ஐக்கிய இராச்சியத்தின், விக்டோரியா மகாராணி இளவரசர் ஆல்பேர்ட்டைத் திருமணம் புரிந்தார்.
1846 – முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போர்: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பஞ்சாபின் சீக்கியருக்கும் இடையில் சோப்ரானில் இடம்பெற்ற போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.
1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
1936 – இரண்டாவது இத்தாலிய-அபிசீனியப் போர்: இத்தாலியப் படையினர் எத்தியோப்பியத் தற்காப்புப் படைகளுக்கு எதிரான தாக்குதலை ஆரம்பித்தனர்.
1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: தேசியவாதிகள் காத்தலோனியாவைக் கைப்பற்றும் நடவடிக்கையை நிறைவேற்றி பிரான்சுடனான எல்லையை மூடினர்.
1940 – சோவியத் ஒன்றியம் தாம் கைப்பற்றிய கிழக்குப் போலந்தில் இருந்து அப்பிரதேச மக்களை சைபீரியாவுக்கு நாடு கடத்தினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய இராணுவத்தினர் போர்னியோவின் தலைநகர் பஞ்சார்மாசினைக் கைப்பற்றினர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: லெனின்கிராட் முற்றுகையை முற்றாக முறியடிக்கும் நோக்கில், சோவியத் செஞ்சேனை, செருமனியப் படைகளுடனும், எசுப்பானியத் தன்னார்வப் படைகளுடனும் கிராசுனி போர் என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
1947 – பாரிசு அமைதி உடன்பாடுகள் இத்தாலி, உருமேனியா, அங்கேரி, பல்காரியா, பின்லாந்து, மற்றும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்டன.
1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் குளொஸ்டர் கோமகன் இளவரசர் என்றியினால் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் திறந்து வைக்கப்பட்டது.
1962 – பனிப்போர்: அமெரிக்க யூ2 உளவு விமான விமானி காரி பவர்சு, சோவியத் உளவாளி ருடோல்ஃப் ஏபெல் ஆகிய கைதிகளின் பரிமாற்றம் இடம்பெற்றது.
1964 – அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் கரையில் 'மெல்பேர்ன்' என்ற விமானந்தாங்கிக் கப்பலும் 'வொயேஜர்' என்ற கடற்படைக் கப்பலும் மோதிக் கொண்டதில் 82 பேர் உயிரிழந்தனர்.
1969 – தமிழ் நாட்டின் முதலமைச்சராக மு. கருணாநிதி தெரிவு செய்யப்பட்டார்.
1972 – ரசு அல்-கைமா ஏழாவது அமீரகமாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்தது.
1984 – கென்யப் படையினர் வடகிழக்குக் கென்யாவில் 5000 இற்கும் அதிகமான சோமாலி-கென்ய இனத்தவரைப் படுகொலை செய்தனர்.
1991 – வன்னி மீதான இலங்கை இராணுவத்தினரின் வன்னி விக்கிரம படையெடுப்பு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதுடன் உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1996 – ஐபிஎம் சதுரங்கக் கணினி 'டீப் புளூ' உலக முதற்தரவீரர் காரி காஸ்பரோவை வென்றது.
2007 – இலினொய் மேலவை உறுப்பினர் பராக் ஒபாமா தான் 2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அவர் பின்னர் இத்தேர்தைல் வெற்றி பெற்றார்.
2009 – தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இரிடியம் 33, காசுமசு-2251 ஆகியன விண்வெளியில் மோதி அழிந்தன.
2013 – இந்தியாவின் அலகாபாத் நகரில் கும்பமேளா திருவிழாவின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்
21 minute ago
35 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
35 minute ago
36 minute ago