2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: பெப்ரவரி 27

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1560 –  ஸ்கொட்லாந்தில் இருந்து பிரெஞ்சுக்காரரை வெளியேற்ற ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் பேர்விக் உடன்பாடு எட்டப்பட்டது.

1594 –  பிரான்சின் மன்னனாக நான்காம் ஹென்றி முடிசூடினான்.

1700 –  புதிய பிரித்தானியா தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

1801 –  வொஷிங்டன், டிசி நகரம் அமெரிக்க காங்கிரசின் நிர்வாகத்தின் கீழ் வந்தது.

1844 –  டொமினிக்கன் குடியரசு ஹெயிட்டியிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1861 –  போலந்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்து வார்சாவில் மக்கள் எதிர்ப்புப் போராட்டம் நடத்தினர்.

1879 –  சக்கரீன் என்ற செயற்கை இனிப்பூட்டி கண்டுபிடிக்கப்பட்டது.

1900 –  பிரித்தானிய தொழிற் கட்சி அமைக்கப்பட்டது.

1933 –  பெர்லினில் ஜேர்மனியின் நாடாளுமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது.

1942 –  இரண்டாம் உலகப் போர்: ஜாவா கடலில் இடம்பெற்ற சமரில் கூட்டுப் படைகளை ஜப்பான் படைகள்             தோற்கடித்தன.

1951 –  ஐக்கிய அமெரிக்காவில் அதிபர் ஒருவர் இருதடவைகளுக்கு மேல் போட்டியிட முடியாதவாறு       அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

1967 –  டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1976 –  முன்னாள் ஸ்பானிய நாடான மேற்கு சகாரா சாராவி அரபு ஜனநாயகக் குடியரசு என்ற பெயரில் விடுதலையை அறிவித்தது.

1991 – வளைகுடாப் போர்: அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ.புஷ், குவைத் விடுதலையானதாக             அறிவித்தார்.

2004 –  பிலிப்பைன்சில் பயணிகள் கப்பலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 116 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .