Janu / 2024 மார்ச் 26 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1917 : முதலாம் உலகப் போர் - காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.
1934 : ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுநர்களுக்கான சோதனை அறிமுகப்படுத்தப்பட்டது.
1942 : இரண்டாம் உலகப் போர் - போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமுக்கு முதற்றடவையாக பெண்கள் சிறைக்கைதிகள் கொண்டு செல்லப்பட்டனர்.
1945 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.
1954 : மார்சல் தீவுகளில் உள்ள பிக்கினி திட்டில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
1958 : ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.
1971 : கிழக்கு பாகிஸ்தான் பாக்கிஸ்தானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. வங்காளதேச விடுதலைப் போர் ஆரம்பமானது.
1979 : அன்வர் சாதாத், மெனசெம் பெகின், ஜிம்மி கார்ட்டர் ஆகியோர் வாசிங்டனில் எகிப்திய - இஸ்ரேல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
1991 : அர்கெந்தீனா, பிரேசில், உருகுவை, பரகுவை ஆகிய நாடுகள் தெற்கத்திய பொதுச் சந்தையை உருவாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
1997 : சொர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.
1998 : அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
2006 : மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.
2000 : விளாடிமீர் பூட்டின் ரஷ்சியாவின் அரசுத்தலைவராகத் தெரிவானார்.
2005 : தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.
2006 : முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.
2007 : கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
2010 : தென் கொரியாவின் கடற்படைப் படகு ஒன்று மூழ்கடிக்கப்பட்டது. 46 மாலுமிகள் உயிரிழந்தனர்.

5 minute ago
13 minute ago
36 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
13 minute ago
36 minute ago
38 minute ago