2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 12

Editorial   / 2021 மே 12 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1551: அமெரிக்க கண்டத்தின் மிகப் பழைமையான பல்கலைக்கழகமான சான் மார்கோஸ் தேசிய பல்கலைக்கழகம் பெரு நாட்டின் லீமா நகரில் ஸ்தாபிக்கப்பட்டது.

1797: வெனிஸ் நகரை நெப்போலியன் வென்றார்.

1942: நாஜி படைகளால் அஸ்ச்விட்ஸ் காஸ் வதை முகாமுக்கு 1500 யூதர்கள் அனுப்பப்பட்டனர்.

1949: பேர்லின் முற்றுகையை சோவியத்  யூனியன் தளர்த்தியது.

1949: ஜேர்மனியின் மேற்குப் பகுதியை தக்கவைத்திருந்த மேற்குலக நாடுகள் மேற்கு ஜேர்மனி எனும் புதிய நாட்டுக்கான அடிப்படை சட்டங்களை அங்கீகரித்தன.

1952: ஜோத் மகாராஜா காஜ் சிங் முடிசூடினார்.

1955: சிங்கப்பூரில் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பை தொடர்ந்து பாரிய கலவரம் ஏற்பட்டது.

2002: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கியூபாவுக்கு விஜயம் செய்தார்.கியூபாவில் 1959 ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின்பின் அந்நாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த ஒருவர்  விஜயம் செய்தமை அதுவே முதல் தடவையாகும்.

2003: சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அல் கயீடாவின் தாக்குதலில் 26 பேர் பலி.

2007: பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 50 பேர் பலி, 100 பேர் காயம்.

2008: சீனாவின் சிச்சுவான் பிராந்தியத்தில் ஏற்பட்ட பூகம்பத்தினால் சுமார் 69,000 பேர் பலி.

2008: அமெரிக்காவில் வேலைத் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது, சட்டவிரோத குடியேற்றவாசிகள் 400 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .