2026 மார்ச் 14, சனிக்கிழமை

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஊற்று கண்டுபிடிப்பு: நிமிடத்திற்கு 10,000 லீட்டர் நீர் (வீடியோ)

Lenin Raj   / 2026 மார்ச் 13 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று காலி - தெனியாய பிரதான வீதியில், பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நீர் வழங்கல் சபையின் தென் மாகாணத்திற்கான புவியியலாளர் இந்திரஜித் கமகேய தெரிவித்துள்ளதாவது:

வரலாற்றுச் சாதனை:

"குழாய் கிணறு ஒன்றினை அமைப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, நிமிடத்திற்கு 10,000 லீட்டர் நீரைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய இந்த ஊற்று கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் இவ்வளவு பெரிய நீர் ஊற்று கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர் 'மடு' பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாகக் கருதப்பட்டது, தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது."

நவீன தொழில்நுட்பம்:

பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அவற்றுக்கிடையேயான வெடிப்புக்கள் ஊடாக நிலத்தடி நீர் தேங்கியிருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் துல்லியமாகக் கண்டறிந்து இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X