Mayu / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பருத்திப்பண்ணை கிராமத்தில், தனிநபா் ஒருவருக்குச் சொந்தமான பனைத் தோப்பில் செவ்வாய்க்கிழமை (31) பாரிய தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது அருகில் உள்ள வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கோ எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகத் தலைமன்னார் பொலிஸார், செல்வேரி இராணுவ முகாம் இராணுவத்தினர், தலைமன்னார் கடற்படையினர் மற்றும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் துரிதமாகச் செயற்பட்டனர். அத்துடன், தீயணைப்புத் துறையினருடன் இணைந்து கிராம மக்களும் பாரிய போராட்டத்திற்குப் பின்னர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று மாலை 4 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago