2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

பஸ் கட்டணம் குறைந்தது (வீடியோ)

Editorial   / 2024 ஒக்டோபர் 01 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்தபட்ச பஸ் பயணக் கட்டணத்தை 25 ரூபாயாக குறைக்க மாகாணங்களுக்கு இடையேயான தனியார் பேருந்து சங்கம் முடிவு செய்துள்ளது. 

அத்துடன், பேருந்து கட்டணத்தை நான்கு சதவீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில்,  அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பேருந்து கட்டணத்தை 4 வீதத்தால் குறைக்க தமது சங்கம்  தீர்மானித்துள்ளதுடன், பஸ்களில் ஏற்படும் சில்லறை தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு பஸ் கட்டணங்களை தீர்மானிக்கும் போது 25 ரூபாய்,  35 ரூபாய் போன்ற தொகைகளில் நிர்ணயித்தால் மக்கள் பயனடைவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .