Editorial / 2026 மார்ச் 10 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூலோக சிங்கம் லின்ரன்
வடமராட்சி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றின் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
வடமராட்சி வடக்கு மற்றும் துன்னாலை பகுதிகளில் நீண்டகாலமாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நெல்லியடி பொலிஸார் அப்பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நேற்று துன்னாலை பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்றில் மணல் கடத்தப்படுவதை அவதானித்த பொலிஸார் அதனை நிறுத்த முற்பட்டனர்.
எனினும் பொலிஸாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகத் தப்பிச் செல்ல முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தல் வாகனத்தை நீண்ட தூரம் துரத்திச் சென்றனர்.
இந்த அதிரடித் துரத்தல் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கமராவிலும் பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளிலும் பதிவாகி தற்போது இணையத்தில் பரவி வருகின்றன.
53 minute ago
56 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
56 minute ago
4 hours ago