Mayu / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக இன்று (05) அதிகாலை நகருக்குள் ஊடுருவிய காட்டு யானை ஒன்று, வர்த்தக நிலையம் மற்றும் பயன்தரு மரங்களை அடித்து நொறுக்கிப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கலடி கறுத்தப்பாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக நிலை கொண்டிருந்த காட்டு யானை, இன்று அதிகாலை செங்கலடி - பதுளை வீதி வழியாக நகருக்குள் நுழைந்தது. அங்கிருந்த விவசாயப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் கதவை உடைத்த யானை, உள்ளே இருந்த அரிசி மூடைகளை இழுத்துப்போட்டுச் சேதப்படுத்தியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள வீடுகளின் மதில்களை இடித்ததுடன், தென்னை மற்றும் வாழை மரங்களையும் முறித்து நாசப்படுத்தியுள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளால் அந்த யானை அப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது.
கனகராஜா சரவணன்
4 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
16 Apr 2026
16 Apr 2026
16 Apr 2026