Mayu / 2026 மே 01 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் யானை ராமலெட்சுமி, வெப்பத்திலிருந்து தப்பிக்க ஷவர் (Shower) குளியல் போட்டு மகிழ்ந்தது.
.பாகன்கள் தண்ணீர் ஊற்றியபோது, யானை ராமலெட்சுமி உற்சாகத்துடன் தண்ணீரில் நனைந்து விளையாடியது. நீண்ட நேரம் தண்ணீரில் நனைந்தபடி அது ஆனந்தக் குளியல் போட்டது சுற்றுலாப் பயணிகளையும் பக்தர்களையும் கவர்ந்தது.
கோடை காலத்தையொட்டி யானைக்குத் தேவையான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளும், பழங்களும் வழங்கப்பட்டு வருவதாகக் கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
34 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
56 minute ago
1 hours ago