Lenin Raj / 2026 மே 12 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

சரவணன்/கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியூடாகப் பாயும் கடும் மழை வெள்ளம் காரணமாக, அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரச உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மண்டூர் கூமாவடிப் பாலம் தற்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.
இந்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வாகனப் போக்குவரத்திற்காகப் பாலத்திற்கு அருகாமையில் தற்காலிக வீதி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வீதியை மூடிப் பாய்ந்ததுடன், தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த பாதையை முற்றாக சேதமடைய செய்துள்ளது.
வீதி உடைந்ததன் காரணமாக மண்டூர், வெல்லாவெளி மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களுக்கிடையிலான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
வெல்லாவெளி மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகஸ்தர்கள் கடமைக்குச் செல்ல முடியாமல் வீதியோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், மருத்துவத் தேவைகளுக்காகவும் நகரப் பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர்.
அத்துடன், தொடர் மழையினால் இப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
"மழைக்காலம் வருவதற்கு முன்பே பாலத்தை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்றிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என மக்கள் தெரிவிக்கின்றனர்.
16 minute ago
35 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
35 minute ago
51 minute ago