2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

அதிசக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் இருவர் கைது

J.A. George   / 2021 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரமின்றி அமோனியம் நைட்ரஜனை வைத்திருந்த ஒருவர் மாத்தறை – மெத்தவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1050 கிலோகிராம் அமோனியம் நைட்ரஜனும் 672 நைட்ரஜன் குச்சிகளும் 10 மீட்டர் நீளமான நைலோன் நூல் 50 சுருள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மெத்தவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், 1000 கிலோகிராம் அமோனியம் நைட்ரஜனுடன் மாத்தறை – கெக்குனதுர பகுதியில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .