2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; ஒருவருக்கு வலை

J.A. George   / 2021 ஜூலை 07 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் 52  வயதுடைய நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ள நிலையில், சந்தேக நபர், யால வனப்பகுதிக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து, சந்தேக நபரை கைது செய்ய பொலிஸாரும், விசேட அதிரடிப்படையும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X