2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

“அரகலய”வின் மூன்றாவது தரப்பினர் யார்?

J.A. George   / 2023 மே 11 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரகலய” போராட்டத்தினால்  நியமிக்கப்பட்ட அரசாங்கமே தற்போது உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

“அரகலய” போராட்டத்தினால் தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார் என்றும் அதன் காரணமாகவே இந்த அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளது என நாமல் கூறினார்.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியும் கூட மூன்றாவது தரப்பினரே போராட்டத்தை வழிநடத்தியதாக தற்போது கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், அரகலயவுக்கு ஆதரவளித்த மூன்றாவது தரப்பினர் யார் என்பது குறித்தும் விரைவில் மேலதிக விவரங்கள் வெளிவரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .