2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

நிதி மோசடி; இருவர் கைது

J.A. George   / 2021 மே 20 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிள் ரக அலைபேசி மற்றும் iPads விற்பனை செய்வதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வர்த்தக நிலையத்தை நடத்தும் போர்வையில் சந்தேகநபர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்போது சந்தே நபர்களால் 11 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களுக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் 70 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களது வர்த்தக நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – முகத்துவாரம் மற்றும் மொறட்டுவை பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .