Mayu / 2026 ஏப்ரல் 30 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 29) பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையினால் நகரின் பல பகுதிகளில் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, மகாடி சாலையில் அமைக்கப்பட்டிருந்த ராட்சத பதாகை ஒன்று சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாடி சாலையில் (Magadi Road) ஒரு நடிகருக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 100 அடி உயரமான பதாகை, பலத்த காற்று மற்றும் மழையினால் நிலைதடுமாறி சரிந்து விழுந்தது.
மேலும், கன மழை காரணமாக ஷிவாஜிநகரில் உள்ள போரிங் மற்றும் லேடி கர்சன் அரசு வைத்தியசாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மழையிலிருந்து தப்பிக்க ஒதுங்கியிருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
நகரம் முழுவதும் சுமார் 170 மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் 43 மின் கம்பங்கள் சேதமடைந்தன.
பெங்களூருவில் ஒரே நாளில் 110 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இது கடந்த 25 ஆண்டுகளில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகப்படியான மழையாகும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் சித்தராமையா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago