Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இராணுவ வீரர்களின் உரிமையை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று (30) நிறைவுக்கு வந்தது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால், கடந்த 20 நாட்களாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அவர்களின் கோரிக்கைகள் அனைத்துக்கும் தீர்வினை பெற்றுக்கொடுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து, போராட்டம் நிறைவுக்கு வந்தது.
அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், போராட்ட இடத்துக்கு இன்று (30) வந்து வாக்குறுதிகளை வழங்கியதாக, அமைப்பின் தலைவர் யூ.டி.வசந்த தெரிவித்துள்ளார்.
விசேட தேவையுடைய இராணுவத்தினரின் கோரிக்கை தொடர்பில் நாளை (01) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் அவதானம் செலுத்தப்படும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச வாக்குறுதி அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ், விசேட தேவையுடைய இராணுவத்தினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுக்கொடுக்கப்படும் என, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார்.
அத்துடன், அப்பகுதியில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்து செல்லுமாறு தெரிவித்த அவர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு இளநீர் பருக்கியதை அடுத்து, போராட்டத்தை நிறைவுக்கு வந்துள்ளது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago