Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 08 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கின்ற காலத்தில் பொதுமக்களின் காணிகளை எப்படியெல்லாம் பலவந்தமாக பறிந்தெடுத்தார்களோ அதேபோல்தான் இப்பொழுது இலங்கை அரசாங்கமும் பொதுமக்களின் காணிகளை பலவந்தமாக பறித்தெடுக்கிறது என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இடம்பெயர்ந்த பொதுமக்களின் காணிகள் அத்துமீறி சூறையாடப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஆனந்தசங்கரியிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடரும் அநியாயங்களை அடக்குவதற்காக வடமாகாணசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் தமிழ் மக்களுக்காக தான் ஆற்றிய சேவையினை தான் இல்லாத காலத்தில் நிச்சயமாக புரிந்துகொள்வார்கள் என்றும் மேலும் ஆனந்தசங்கரி தனது பேட்டியில் தெரிவித்தார்.
தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட பேட்டியின் முழுவிபரங்களையும் காணொளியில் காணலாம்.
xlntgson Saturday, 09 October 2010 08:29 PM
காலம் கடந்த ஞானம்! நாடு கடந்த தமிழீழ பயம் அரசை இவ்வாறான முகாம் அமைப்பு & பாதுகாப்பு நடவடிக்கைகளில் மூழ்கடிக்கும். அதுவே தேவை இல்லாத பாதுகாப்பாகி, பொன்சேகா போன்றவர்களை உருவாக்கலாம். ஒருவரை தண்டித்து விடுவதனாலேயே அவ்வாறான அரசியல் தலைமைத்துவ ஆசை உடையவர்களை இல்லாமல் செய்துவிட முடியாது. அமெ. ஐரோப்பிய முயற்சிகள் அவ்வாறானவர்களை தூண்டுவது தான் என்பது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்களை கவனித்தால் தெரியும். இந்தியாவை பற்றிப்பிடித்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை. அவர்கள் ஒரே குடையின் கீழ் வருமாறு கோருகின்றனர்!
Reply : 0 0
Vanniyan Friday, 14 January 2011 08:34 AM
ஐயோ பாவம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago