2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

ஊடக சுதந்திரத் தின கலந்துரையாடல்

Super User   / 2012 மே 04 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக ஊடக சுதந்திரத் தினமான மே 3 ஆம் திகதி வியாழக்கிழமை, 'புதிய குரல்கள்: சமூகங்களின் மாற்றத்திற்கு ஊடக சுதந்திரம் உதவுகிறது' எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலொன்று இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தானத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க, லக்பிம செய்தி ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க, தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் பிரதிநிதி லக்ஷ்மன் குணசேகர, உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதி ரங்க ஜயசூரிய, சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதி திலீஷா அபேசுந்தர உட்பட ஊடகத்துறையை சேர்ந்த பலர் இதில் பங்குபற்றினர். டெய்லி மிரர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்  சம்பிக்கா லியனாராய்ச்சி இக்கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்துறை தொடர்பான இரு நூல்களும் வெளியிடப்பட்டன.
 
வீடியோ-  பகுதி 1



வீடியோ - பகுதி 2



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .