2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

பொன்சேகா விடுதலையானார்...

Menaka Mookandi   / 2012 மே 21 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டார். 2010 பெப்ரவரி 8 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார். பொன்சேகா, இராணுவத் தளபதியாக பதவி வகித்த காலத்தில் இராணுவத்தினருக்கான ஆயுத கொள்வனவில் மோசடி இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டில் அவருக்கு இராணுவ நீதிமன்றம் 30 மாத சிறைத்தண்டனை வழங்கியிருந்தது. அத்துடன் வெள்ளைக்கொடி வழக்கில் அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இத்தீர்ப்புக்கு எதிராக அவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்கும் உத்தரப்பத்திரத்தில் கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி கையெழுத்திட்டார். அதையடுத்து நவலோக்க வைத்தியசாலையிலிருந்து இன்று விடுதலை செய்யப்பட்ட பொன்சேகா, தனது மேன்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டார். அதன்பின் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் வெலிக்கடை சிறைச்சாலையின் முன்னால் திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .