2026 ஜனவரி 14, புதன்கிழமை

பிரதம நீதியரசருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

George   / 2015 ஜனவரி 12 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}



பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்க்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று திங்கட்கிழமை(12) முன்னெடுக்கப்பட்டது.

 உயர்நீதிமன்றத்துக்கு முன்பாகவும் நீதியமைச்சுக்கு முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையால் பிரதம நீதியரசர் உயர்நீதிமன்றுக்கு இன்று திங்கட்கிழமை செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 44 ஆவது பிரதம நீதியரசருக்கு 48மணிநேர காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அப்பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நியமிக்குமாறும் கோரியுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .