Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 ஜனவரி 10 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலை மாணவர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் பொறுப்பு, பிள்ளைகள், பெற்றோர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என அனைவருக்குமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் பொறுப்புடன் நடந்துகொண்டால் மாத்திரமே ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும் என, இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
பிள்ளைக்கு 'கொவிட்' அறிகுறிகள் இருந்தால் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் பாதிக்கப்பட்டால், தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு உபுல் ரோஹண பெற்றோரை வலியுறுத்தியுள்ளார்.
பல முன்னணி பாடசாலைகளில் இடம் குறைந்த வகுப்பறையில் 40 அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்று வருவதாகவும், அவ்வாறான வகுப்பில் உள்ள ஒரு பிள்ளைக்கு 'கொவிட்' தொற்று ஏற்பட்டாலும், அதானால் ஏற்படும் அபாயம் அதிகம் எனவும் உபுல் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
2 minute ago
12 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
41 minute ago