Mayu / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio-Technology) யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவி தேவதாஸ் கிஷானி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், கிஷானி யாழ். மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், அகில இலங்கை ரீதியில் 27-வது இடத்தையும் பெற்று கல்லூரிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கிஷானி 10 மாதக் குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தை கடற்றொழிலுக்குச் சென்ற வேளையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
தாயின் அர்ப்பணிப்பு: தந்தையற்ற நிலையில், கிஷானியின் தாயார் கூலித் தொழில் செய்து பல இன்னல்களுக்கு மத்தியில் தனது மகளைக் கல்வி கற்க வைத்துள்ளார்.
வசதியற்ற சூழல்: நிம்மதியாக அமர்ந்து படிக்க ஒரு முறையான வீடு கூட இல்லாத நிலையிலும், வறுமையைத் தனது கல்விக்குத் தடையாகக் கருதாமல் கிஷானி இச்சாதனையைப் புரிந்துள்ளார்.
பு.கஜிந்தன்
19 minute ago
40 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
44 minute ago