2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

காவல்படை: TID-யால் யாழ். முதல்வர் மணி கைது

Shanmugan Murugavel   / 2021 ஏப்ரல் 09 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். றொசாந்த் 

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்றிரவு எட்டு மணிக்கு மணிவண்ணன், சபை உறுப்பினர் பார்த்திபன் ஆகியோரை வாக்குமூலம் வழங்க வருமாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்திருந்தனர். 

இருவரிடமும் நீண்ட நேர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், இன்று அதிகாலை 2.15 மணியளவில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மணியைக் கைது செய்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், மேலதிக விசாரணைகளுக்காக என வவுனியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அதேவேளை, பார்த்திபனிடம் சுமார் எட்டு மணி நேர விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலத்தை பெற்ற பின்னர் விடுவித்துள்ளனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X