J.A. George / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-ரிட்ஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிசுவின் தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிசுவின் பெற்றோருக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவரது தந்தைக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.
கண்டி பிரதேசத்தை சேர்ந்த குறித்த குழந்தை கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் அவர்களுடைய பெற்றோர் கொட்டிகாவத்தை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், குழந்தை மற்றும் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக குறித்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 மாத சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago