Lenin Raj / 2026 மே 12 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

தலவாக்கலை - டயகம பிரதான வீதியில், ஹோல்புறூக் நகருக்கு அருகில் இன்று (12) காலை பாடசாலை வேன் ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று காலை சுமார் 7.45 மணியளவில், தலவாக்கலையிலிருந்து டயகம நோக்கிப் பயணித்த அரச பேருந்து, அதே திசையில் பயணித்த பாடசாலை வேனுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக பாடசாலை வேனுக்கு சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
13 minute ago
32 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
32 minute ago
48 minute ago