J.A. George / 2023 ஜூன் 28 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக ஊடக செயற்பாட்டாளர் புருனோ திவாகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு இன்று (28) காலை அழைக்கப்பட்டிருந்தார்.
நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள புருனோ திவாகர, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்ட விரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த புருனோ திவாகர, “யாரோ ஒருவர் நம் வாயை அடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இது அவர்களின் முயற்சியாக இருந்தால், இந்தத் தடைகளுக்குப் பின்னால் நாமும் நம் வேலையைச் செய்ய முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளரான புருனோ திவாகர கடந்த மே மாதம் 31ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
43 minute ago
52 minute ago
59 minute ago