J.A. George / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை இன்னும் முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 40 சதவீதமானவர்களுக்கே பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், அது 75 முதல் 80 சதவீதத்தினை அடையும் போது, சில தளர்வுகளை மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சுகாதார தரப்பினர் மற்றும் நாட்டின் தொற்று நிலைமை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே உரிய வகையில் முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago