2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

வயல்வெளியில் மீட்கப்பட்ட சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு (வீடியோ)

Mayu   / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்துறை பகுதியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், வயல்வெளியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மரண விசாரணைகளின் பின்னர் அவரது சடலம் இன்று (02) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னணி:

உயிரிழந்தவர் சம்மாந்துறை-10, சாலி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா றியால் (வயது 50) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை (31) மாலை சம்மாந்துறை புறநகர்ப் பகுதிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், சம்மாந்துறை அல் அமீர் பாடசாலைக்கு பின்புறமாக உள்ள வயல்வெளிப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதாகப் பொதுமக்களிடமிருந்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் நூர்தீன் முஹம்மட் சர்ஜூனின் உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல்-ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

பின்னர், சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, குறித்த நபர் திடீர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்தவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும், அவர் அதற்கான சிகிச்சைகளைத் தொடர்ச்சியாகப் பெறவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் ஆலோசனையின் பேரில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரின் வழிநடத்தலில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .