J.A. George / 2021 ஜூலை 14 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மீண்டும் வாகன விபத்துகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறினார்.
அவர்களில் 07 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும் உயிரிழந்த ஏனைய மூவரும் பாதசாரிகள் என அவர் கூறினார்.
வாகன விபத்துகளினால் 2020 ஆம் ஆண்டு 2,144 பேரும் 2019 ஆம் ஆண்டு 2,139 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் மாத்திரம் 1,266 பேர் மரணமடைந்துள்ளதாக கூறினார்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025