Editorial / 2026 மார்ச் 10 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூலோக சிங்கம் லின்ரன்
யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (09) இரவு தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வாளுடன் புகுந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
ஓட்டுமடம் சந்தியிலிருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இரவுத் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, வாளேந்திய நபர் ஒருவர் இளைஞன் ஒருவனை துரத்திக் கொண்டு வந்துள்ளார்.
உயிருக்கு பயந்த இளைஞன் தப்பிச் செல்லும் நோக்கில் பள்ளிவாசலுக்குள் புகுந்து, அங்கிருந்த மதில் வழியாக ஏறி தப்பிச் சென்றுள்ளார்.
வாளுடன் துரத்தி வந்த நபர் பள்ளிவாசலுக்குள் நுழைந்ததை கண்ட அங்கிருந்த இளைஞர்கள், உடனடியாகச் செயற்பட்டு அந்த நபரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்த வாளை பறிமுதல் செய்துள்ளனர். எனினும், குறித்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பறிமுதல் செய்யப்பட்ட வாளைப் பொறுப்பேற்றதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பு.கஜிந்தன்

16 minute ago
40 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago
43 minute ago