2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாணசபையின் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாணசசையின் 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் அமர்வு நேற்று சபைத் தவிசாளர் டப்ளியு.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி தலைமையில் காலை 9.30க்கு ஆரம்பமானது, 

இதன்போது, கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விபரங்களை சபையில் சமர்ப்பித்து, துறைக்குப் பொறுப்பான அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் உரையாற்றினார். இதனையடுத்து குழு நிலை விவாதம் ஆரம்பமானது.

பல்வேறு வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்ற மேற்படி குழுநிலை விவாதம் பிற்பகல் 2.00 மணிவரை நீண்டு சென்றது.

இறுதியில் இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கீட்டுக்கு எதிராக வாக்களித்த அதேவேளை, ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர்.

இதன்படி, மேற்படி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 4 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X