2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அக்கரைப்பற்று தாக்குதல் சந்தேகநபர்களை 24 மணிநேரத்தில் கைது செய்வதாக பொலிஸ் உறுதி: எச்.எம்.எம்.ஹரீஸ்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 31 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்றில் வைத்து தனது வாகனம் மீது தாக்குதல் நடத்திய கும்பலை 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்வதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உறுதி மொழி வழங்கியுள்ளதாக அம்பாறை மாவட்ட மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் - தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றிலுள்ள மு.காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் ஏ.எல்.தவத்தின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய போசன நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது – அவரின் வாகனம் மீது முச்சக்கர வண்டியில் வந்த கும்பலொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினரைத் தாக்குவதற்கும் முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தாக்குதல் நடத்தியோரைக் கைது செய்யுமாறு கோரி - அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் முன்பாக மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் ஆதரவாளர்கள் சகிதம் வீதியில் அமர்ந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அக்கரைப்பற்றுப் பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீசிடம் முறைப்பாட்டினையும் பெற்றுக் கொண்டனர்.

தேசிய காங்கிரஸைச் சேர்ந்த பண்டா, ரகுமத்துல்லா, றிஸ்வி மற்றும் சிறாஜ் ஆகியோர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் தம்மீது தாக்குதல் நடத்த வந்ததாகவும், இது குறித்து பொலிஸ் முறைப்பாட்டில் தான் விபரமாகத் தெரிவித்துள்ளதாகவும் நடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் - தமிழ்மிரரிடம்; கூறினார்.

இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்டோரை 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்வதாக, பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தமக்கு உறுதி வழங்கியதாகவும், அதன் பின்னர் தாம் சத்தியாக்கிரகத்திலிருந்து விலகிக் கொண்டதாகவும் ஹரீஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கலந்து கொண்ட மதிய உணவு நிகழ்வில் மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   



  Comments - 0

  • Kanavaan Friday, 31 August 2012 03:04 PM

    வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்...

    Reply : 0       0

    ACM Friday, 31 August 2012 03:56 PM

    ஐயா , அக்கரைப்பற்று என்ன அடியாட்களின் கோட்டையா? அரசாங்கம் சட்டத்தை அமுல்படுத்தமாட்டாதா ? அல்லது இது சுதந்திர கட்சிக்காரா்கள் செய்ததில்லை என்று விலக முடியுமா ?

    Reply : 0       0

    raka Friday, 31 August 2012 04:04 PM

    அவர்களுக்குத்தோல்வி என்பது உறுதி

    Reply : 0       0

    meenavan Friday, 31 August 2012 05:05 PM

    அதாஉல்லாவின் கோட்டையில் ஓட்டை ஹரிசின் வாகனத்திலும் ஓட்டை. .....?

    Reply : 0       0

    raka Friday, 31 August 2012 05:06 PM

    நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

    Reply : 0       0

    aysha Friday, 31 August 2012 06:07 PM

    ஏன் அக்கரைப்பற்றுக்கு போனீர்கள்....

    Reply : 0       0

    rfa Friday, 31 August 2012 06:11 PM

    அவர்களுக்குத்தோல்வி என்பது உறுதி

    Reply : 0       0

    Jsu Friday, 31 August 2012 06:47 PM

    இவ்வாறானவர்களுக்கு முடிவு...?

    Reply : 0       0

    jasmin Saturday, 01 September 2012 02:17 PM

    evarkal eppadi povarkal.? nangel ivarkelai alaikke villai.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X