2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் 300 பேர் இணைவு

Super User   / 2013 ஜனவரி 03 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த சுமார் 300 பேர் இன்று வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உத்தியோகபூர்மாக இணைந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான பி.எச். பியசேனவின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது - இளம் பட்டதாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டனர்.

திருக்கோவில், ஆலையடிவேம்பு, கல்முனை தமிழ் பிரிவு மற்றும் நாவிதன்வெளி பிரதேச செயலாளர்களான முறையே கலாநிதி எம். கோபாலரட்ணம், வி. ஜெகதீஸன், கே. லவநாதன் மற்றும் எஸ். கரண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


  Comments - 0

  • thuppakki Thursday, 03 January 2013 03:32 PM

    பாவம் பட்டதாரிகள் எவ்வளவு சந்தோசத்துடன் சேர்கின்றனர், எல்லாப்புகழும் பியசேனாவுக்கே.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X