2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சென்னல் கிராமம் 1ஆம் பிரிவு பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி சாதனம் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறைப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய கிராமமான சென்னல் கிராமம் 1ஆம் பிரிவிலுள்ள மஸ்ஜிதுல் உம்றா பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கி சாதனமொன்றை சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரி ஐ.எல்.எம்.மாஹிர்  வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை அப்பள்ளிவாசலில் நடைபெற்றது.

அல்மதரசதுல் இஸ்லாமியா அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி கே.எம்.கே.முஹம்மட் ரம்ஸின் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.ஆதம்லெப்பை, செயலாளர் நௌஷாட் உட்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X