2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு 10,000 ரூபா அபதாரம்

Super User   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்தவருக்கு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரியங்கி நேற்று புதன்கிழமை 10,000 ரூபா அபராதம் விதித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இறக்காமம், குடுவில் பிரதேசத்தில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய இவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு டுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை இந்த வழக்கை எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரியங்க சந்தேகநபர் குற்றவாளி என ஏற்றுக் கொண்டதையடுத்து 10,000 ரூபா அபராதம் விதித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X