2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்முனை பிரதேசத்தில் 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணல்

Super User   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் அஸீஸ்


கடந்த மூன்று வாரத்திற்குள் கல்முனை பிரதேசத்தில் 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் டெங்கு நோயாளர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் பெய்த அடை மழையினை தொடர்ந்து கல்முனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

கடந்த மூன்று வார காலப் பகுதியில் 21 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  இதில் கல்முனைக்குடி பிரதேசத்தில் 16 பேரும் மருதமுனை பிரதேசத்தில் 5 பேர்களும் உள்ளடங்குகின்றனர்.

கல்முனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் தொடர்ந்து இனங்காணப்பட்டு வருவதனால் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் குடியிருப்பற்ற வெற்றுக் காணிகள் முற்றுயிடும் வேலைத்திட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தொடர்பாக கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். ரயீஸ் கருத்து தெரிவிக்கையில்,

"குடியிருப்புகளற்ற தனியாருக்கு சொந்தமான வெற்றுக் காணிகளிலுள்ள குப்பைகள் மற்றும் உபகரணங்களில் நீர் தேங்கி நிற்பதனாலே இங்கு டெங்கு நோய் பரவுகின்றன. தற்போது வெற்றுக்காணிகள் முற்றுகை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளதுடன் இக்காணி சொந்தக்காரர்களுக்கு அறிவித்தல்களையும் விடுத்துள்ளோம்.

மூன்று நாட்களுக்கு இடையில் காணிகள் சுத்திகரிக்கப்பட்டு சீர்செய்யப்படாவிடின் இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்" என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X