2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வறுமை நிலையிலுள்ள 95 குடும்பங்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

பொத்துவில், திருக்கோவில் பிரதேசங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களின் வாழ்வாரத்தை மேம்படுத்துவதற்கான 'குடும்ப புனர்வாழ்வு திட்டம்' கீழ் 95 குடும்பங்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தாண்டியடி சமூக பொருளாதார அபிவிருத்தி சங்க மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பொத்துவில் பிராந்திய வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், வேள்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் இருதயம் மைக்கல், திட்ட இணைப்பாளர் தயாளன் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொணடனர்.

இதன்போது, ஆடுவளர்ப்பு, கோழிவளர்ப்பு, ஆடை வியாபாரம், மா அரைத்தல், மிளகாய்தூள்; அரைத்தல் மற்றும்  விவசாயம், தையல் போன்ற சுயதொழிலுக்கான இயந்திரங்கள், உபகரணங்களை வழங்கப்பட்டன.

இதேவேளை இவர்கள் இத்தொழிலை ஆரம்பிப்பதற்கான பயிற்சிகள் விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு அதன்பின்னரே இதற்கான உபகரணங்கள் வழங்கிவைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X