2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தென் கிழக்கு பல்கலை பொறியியல் பீடத்திற்கு 100 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்

Super User   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு 100 மாணவர்கள் புதிய கல்வி ஆண்டிற்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

இதற்கான அனுமதியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது என பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

சிவில், மின்னியல்;, இலத்திரனியல், பொறிமுறை, மற்றும் கணனி உட்பட ஐந்து துறைகள் தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

"தென் கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடம் ஓலுவில் வளாகத்திலேயே இயங்கும். இதனாலேயே பொறியியல் பீட அங்குரார்ப்பண நிகழ்வு ஒலுவிலில் இடம்பெற்றது. எனினும் சிலர் தெரிவிப்பது போன்று அம்பாறையில் ஒருபோதும் பொறியியல் பீடம் செயற்படாது" என உப வேந்தர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பொறியீயல் பீடத்திற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

எனினும் பல்கலைக்கழக பொறியில் பீடத்திற்கு தேவையான அனைத்து வசதிகளை நிறைவு செய்வதற்கு இன்னும் 10 வருடங்கள். அதுவரை பொறியியல் பீடத்திலுள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என உப வேந்தர் இஸ்மாயில் தெரிவித்தார்.

  Comments - 0

  • Samar Friday, 15 February 2013 03:15 AM

    உருப்படியா இருந்த கல்வித்துறை அது ஒன்றும் தான் அதையும் சீரழிக்க முடிவு பண்ணியாச்சி.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X