2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

கல்முனை மாநகர சபைக்கு ஆசியா மன்றம் 15 இலட்சம் ரூபா நிதியுதவியை

Super User   / 2012 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகர சபைக்கு ஆசியா மன்றம் 15 இலட்சம் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.

கல்முனை மேயர் செயலகத்தில் மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனை சபை கூட்டத்தின் போது இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தினை மேயர் சிராஸ் ஆசியா மன்றத்தின் அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்திடம் கையளித்தார்.

கல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சமூகவகை பொறுப்பை பலப்படுத்துவதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் மக்கள் பங்கேற்புடனான வரவுசெலவுத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட மக்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக ஆசியா மன்றம் முதற் கட்டமாக இந்நிதியுதவியினை கல்முனை மாநகர சபைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாநகர ஆணையாளர் ஜே. லியாகத் அலி மற்றும் கல்முனை பிரதேச வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட சமூக அமைப்புக்களை பலப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதேவேளை, கல்முனை மாநகர சபை பிரதேசத்தில் நடமாடும் சேவைகளை மேற்கொள்வதற்காக சீடோ மற்றும் நேசம் ஆகிய இரண்டு உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஆசியா மன்றமானது ஒரு மில்லியன் ரூபா நிதியினை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X