2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பொதுச்சந்தை நிர்மாணிப்பு தொடர்பான ஆணைக்குழு அறிக்கை 15ஆம் திகதி சமர்ப்பிப்பு

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 11 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அட்டாளைச்சேனையில் பொதுச்சந்தைக் கட்டிடதொகுதியொன்றை நிர்மாணிப்பது தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தனிடம் கையளிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரும் ஆணைக்குழுவின் தலைவருமான துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் உள்ள பொதுச்சந்தைக்கான கட்டிடம் பிரதேச சபையின் கட்டிடப் பகுதியில் அமைப்பதால் பெரியபள்ளிவாசல் மறைக்கப்படுவது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.

இதனையடுத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், கிழக்கு மாகாண அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தலைமையிலான மாகாணசபை உறுப்பினர் எஸ்.புஸ்பராஜா கிழக்கு மாகாண ஆளுநரின் உதவிச் செயலாளர் எஸ்.கே.ஜெயரட்ண, உள்ளூராட்சி அம்பாறை மாவட்ட உதவி ஆணையாளர் ஜே.எம்.இர்ஷாத், முதலமைச்சர் செயலக செயலாளர் வ.சச்சிசானந்தம் ஆகிய 4பேர் கொண்ட ஆணைக்குழு ஒன்றை கடந்த மாதம் நியமித்தார்.

இக்குழுவின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் இறுதிநாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் ஆணைக்குழுவின் நவரெட்ணராஜா தலைமையில் நடைபெற்றது.

மேற்படி ஆணைக்குழுவின் முன்னால் பொதுமக்கள் சாட்சியமளிக்கும் இரண்டு நாள் நிகழ்வு நேற்றும் இன்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது பிரதேசnமக்கள் பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேசசபை தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் பிரதேசசபை உபதவிசாளர் உறுப்பினர்கள் புத்திஜீவிகள் அரசியல்வாதிகள் கலந்துகொண்டு சாட்சியமளித்தனர்.

இதன்பின்னர் கட்டிடம் அமைக்க இருக்கும் இடத்தை ஆணைக்குழுவினர் சென்று பார்வையிட்டு பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் பிரசேசபை உறுப்பினர்கள் பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.


  Comments - 0

  • janoovar Monday, 12 December 2011 01:14 PM

    ஆணைக்குழுத் தலைவர் அவர்களே எங்கள் ஊரின் அழகை மறைக்காமல் சந்தை அமைக்க நடவடிக்கை எடுங்கள்.

    Reply : 0       0

    meenavan Monday, 12 December 2011 04:45 PM

    பொது சந்தை விடயத்தில் ஆணைக்குழு? அட்டாளைச்சேனை பிரதேச செயலக ஆளுகைக்கு உட்பட்ட அஸ்ரப் நகர மக்களின் இருப்பு விடயத்தில் ஒன்றுமில்லையா? சமூக மேன்பாட்டைவிட சந்தை விடயம் முன்னுரிமையா?

    Reply : 0       0

    zarjoon Monday, 12 December 2011 08:54 PM

    மீனவன் சரியாக சொன்னீங்க. அஷ்ரப் நகர் விடயத்தில் தலையிட்டால் கொந்தராத்து கிடைக்குமா? பணம் என்றால் ponamum எழும்பும். தேர்தல் வந்தால் எல்லோரும் வருவார்கள். வீரம் பேசுவதற்கு பிரசனை எண்டால்.

    Reply : 0       0

    meenavan Monday, 12 December 2011 09:51 PM

    zarjoon நமது அரசியல் தலைவர்களின் வகிபாகம், சமூகம் சார்ந்த கொள்கை அரசியலை விட்டு, கொந்தராத்து அரசியல் செய்கிறார்கள் என்று சொன்னால் பொருந்துமா?

    Reply : 0       0

    சிறாஜ் Monday, 12 December 2011 10:15 PM

    ஆணைக்குழுவின் தலைவர் நல்லவர், அவரின் முடிவு சிறப்பானதாக அமைந்தது அவரே இடத்தையும் அழகா காட்டி இப்படியே சந்தையை அமைக்குமாறு சொல்லி இருக்கிறார். அப்படியே அமையும். ஊரின் சேவையைத் தடுக்க வேண்டாம்.

    Reply : 0       0

    nanpan, add Monday, 12 December 2011 11:28 PM

    ஊரின் அழகு ஊரிலுள்ளவர்களின் ஒற்றுமையில்தான் உள்ளது. எதையும் மறைக்கவேண்டிய அவசியமில்லை.
    எனவே ஆணைக்குழுவின் தலைவர் ஊர் மக்களின் அபிலாசைக்கு இணங்க ஒரு நல்ல முடிவை எடுப்பார்.

    Reply : 0       0

    senaiyuraan Tuesday, 13 December 2011 04:08 PM

    நமது ஊரின் சந்தை விடயத்தை யாரோ முடிவு சொல்லும் வரை காத்து நிற்பது எமது ஊருக்கும் எமக்கும் வெட்கமா தோணலயா ??????

    Reply : 0       0

    senaiyuraan Tuesday, 13 December 2011 04:17 PM

    நமது சந்தை அமையும் இடத்தையும் அழகையும் அந்த ஊரான் நாங்கள்தான் ரசிக்க வேண்டும். இதை விட்டு அயலவர்கள்
    (N.P. A.) ரசனைக்கு எமது சந்தை அமைய வேண்டுமா ???? காலம் செய்த கோலமடா!.....................
    நாங்கள் செய்த குத்தம் என்ன ...........

    Reply : 0       0

    nanpan, add Tuesday, 13 December 2011 07:08 PM

    இந்த சிறிய விடயத்தை ஒரு பெரியவிடயமாக ஆக்கியது எமது ஊர் பழைய அரசியல்வாதிதான் இது எம்மவர்கள் எமக்கு செய்யும் ஒரு துரோகம்தான். இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள்தான் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X