Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஏப்ரல் 29 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
காலாவதியான, முறையான சுட்டுத் துண்டுகள் இடப்படாத பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 15 கடை உரிமையாளர்களுக்கு நேற்று வியாழக்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எம்.எச். றிபாத்டீன் தலா 5 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும், கல்முனை பொலிஸாரும் இணைந்து கல்முனை நகரிலுள்ள கடைகளில் நேற்று வியாழக்கிழமை திடீர் தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டனர்.
இதன் போது பழுதடைந்த, காலாவதியான மற்றும் முறையான சுட்டுத் துண்டுகள் இடப்படாத பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 15 கடை உரிமையாளர்களுக்கெதிராக வழக்குகளைப் பதிவு செய்து, குறித்த பொருட்களையும் கைப்பற்றியதோடு, சந்தேக நபர்களை கல்முனை தீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினமே ஆஜர் செய்தனர்.
15 கடை உரிமையாளர்களையும் குற்றவாளிகளாகக் கண்ட நீதவான், அவர்களை எச்சரித்த பின்னர் தலா 5 ஆயிரம் வீதம் 75 ஆயிரம் ரூபாவினை அபாராதமாக விதித்துத் தீர்ப்பளித்ததோடு, கைப்பற்றப்பட்ட பொருட்களை அழிக்குமாறும் உத்தரவிட்டார்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம். பஸாலின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தேடுதல் நடவடிக்கையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களான ஏ.எல்.எம். கலீல், ஏ.எம். பாறூக், அப்பாஸ் நியாஸ், ஜே.எம். நிஜாமுத்தீன், ஏ.எல்.எம். ஜலீல் மற்றும் ஜே.எம். நிப்தார் ஆகியோருடன் கல்முனை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஆரியரத்ன தலைமையிலான குழுவினரும் பங்குகொண்டனர்.
5 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
59 minute ago
2 hours ago
2 hours ago