2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு 2 மாத கடூழிய சிறை

A.P.Mathan   / 2011 மார்ச் 24 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவருக்கு இரண்டு கட்டு கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 மாத கடூழிய சிறைத் தண்டனையும் 9 ஆயிரத்து 900 ஆயிரம் (9,900) தண்டப் பணமாக செலுத்துமாறு கல்முனை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.றிஸ்வி நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மருதமுனை மக்கள் வங்கி வீதியில் உள்ள ஒருவரை இரண்டு கட்டு கஞ்சாவுடன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கைது செய்து சந்தேகநபரை கல்முனை மாவட்ட
நீதிமன்றத்தில் ஆயர் படுத்தியபோதே அவருக்கு மேற்படி தண்டனை வழங்கப்பட்டது. இவ் தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் கடூழிய சிறைத்தண்டனை வழங்குமாறும் நீதவான் ஏ.எம்.றிஸ்வி மேலும் உத்தரவிட்டார்.

தண்டனைக்குட்படுத்தப்பட்ட மேற்படி நபர் இதற்கு முன்னரம் கஞ்சாக் கட்டுகள்; வைத்திருந்தது தொடர்பாக நான்கு தடவைகள் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்; எனவும் கல்முனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .