Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 21 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
அம்பாறை மாவட்டத்தில் கல்வி கற்பதற்குரிய திறமையுடைய வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களுக்கான 'மாணவர் ஊக்குவிப்பு விழா - 2011' நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களில் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பணம் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்களும் பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வை 'சுவிஸ் உதயம் கிழக்கு' என்னும் அமைப்பு நடத்தியது.
அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். சிறப்பு அதிதியாக அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியூ, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் க.லவநாதன், மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சுவிஸில் வாழும் புலம்பெயர் மக்கள் தமது பகுதிகளில் வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களுக்கு இந்த அமைப்பு ஊடாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன.
14 minute ago
14 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
14 minute ago
22 minute ago