2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

3 ஆசிரியர் நியமனம்: வழமைக்கு திரும்பியது அல் அக்ஷா வித்தியாலயம்

Super User   / 2013 பெப்ரவரி 27 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-யூ.எல்.மப்றூக்


பொத்துவில், சின்ன - உல்லை அல் அக்ஷா வித்தியாலயத்துக்கு உடனடியாக 03 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதையடுத்து இன்று புதன்கிழமை பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி.எம்.ரஹ்மதுல்லா தெரிவித்தார்.
 
மேற்படி பாடசாலையிலிருந்து இடமாற்றப்பட்ட 15 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு கோரி பாடசாலை மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து கடந்த வியாழக்கிழமை கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டதோடு, தமது கோரிக்கை நிறைவேற்றுப்படும் வரையில் - பாடசாலைக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதில்லை என பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

அதனடிப்பபடையில் அல் அக்ஷா வித்தியாலயத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மாணவர்கள் எவரும் சமூகமளிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் மேற்படி அல் அக்ஷா வித்தியாலயத்துக்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் (மௌலவி) விஜயம் செய்ததோடு, குறித்த பாடசாலைக்கு உடனடியாக 3 ஆசிரியர்களை வழங்கினார்.

பொத்துவில் பாடசாலைகளில் கற்பித்து வந்த ஆசிரியர்களில் மூவரையே மேற்படி அல் அக்ஷா வித்தியாலயத்துக்கு இடமாற்றம் மூலம் வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்கியுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.சி.எம்.ரஹ்மதுல்லா கூறினார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் ஒருவர் இன்றைய தினம் பாடசாலைக்கு வந்து கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாகவும், ஏனைய இரண்டு ஆசிரியர்களும் நாளை கடமையினைப் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளதாகவும் சின்ன உல்லை அல் அக்ஷா வித்தியாலயத்தின் அதிபர் மேலும் கூறினார்.

575 மாணவர்களைக் கொண்ட சின்ன உல்லை அல் அக்ஷா வித்தியாலயத்துக்கு 32 ஆசிரியர்கள் தேவையாக இருந்த போதும், 17 ஆசிரியர்களே கடமையாற்றி வந்தனர். அக்கரைப்பற்று கல்வி வயலயத்துக்குட்பட்ட பிரதேசங்களில் - பொத்துவில் கோட்டப் பகுதியிலேயே அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • rabzath Thursday, 28 February 2013 09:07 AM

    Good decision.....................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X