2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

செம்மணிக்குளம் 3 கோடியே 10 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


பொத்துவில் செம்மணிக்குளம் 3 கோடியே 10 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.  கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சு இதற்கான நிதியை வழங்கி உள்ளது.

இவ்வேலைத்திட்டத்தனை அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(10) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாணப் பணிப்பாளர் வீ.திலகராஜா, பிராந்தி பிரதிப் பணிப்பாளர் யூ.எல் நஸார் மற்றும் நீர்ப்பாசன உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கடந்தகால யுத்தம் காரணமாக புனரமைக்கபடாமல் கிடந்து வந்த இக்ககுளத்தை புனரமைப்புச் செய்வதன் மூலம் 210 ஏக்கர் காணிகளில் நெற்செய்கையை இருபோகங்களிலும் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .