Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 பெப்ரவரி 04 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார், எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தில் தொடந்து பெய்துவரும் மழையினால் இதுவரை 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 11,400 குடும்பங்களைச் சேர்ந்த 43,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
இவாகள் 59 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதுடன், ஏனையோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்மாந்துறை, நாவிதன்வெளி, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை (தமிழ்), கல்முனை (முஸ்லிம்), அட்டாளைச்சேனை, திருக்கோவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, இறக்காமம், தமன, லகுகல, உகன, மகாஓயா, நாமல்ஓயா மற்றும் அம்பாறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளே வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
சேனநாயக்க சமூத்திரத்தின் ஆறாவது வான் கதவும் திறக்கப்பட்டள்ளதால் காரைதீவு - அம்பாறை வீதி, மாவடிப்பள்ளி - வளத்தாப்பிட்டி, அம்பாறை - மகாஓயா மற்றும் அம்பாறை - இங்கினியாகல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளம் காரணமாக கல்முனையிலிருந்து நாவிதன்வெளிக்கு கிட்டங்கி பாலத்தின் வழியாக தோணியில் சென்ற 07 பேரில் இருவர் காணாமல் போயுள்ளனதாக நாவிதன் வெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்திரண தெரிவித்தார்.
இவர்கள் சென்ற தோணி கிட்டங்கி பாலத்தில் வைத்து கவிழ்ந்துள்ளதுடன் இவர்களில் 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏனை இருவரும் நீரில் இழுத்துச்செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிள்ளையார் கோவில் வீதி, அண்ணாமலை எனும் இடத்தைச் சேர்ந்த முத்துராமனன் தனுஷ் வயது 34, மற்றும் நாவிதன் முதலாம் பிரிவைச் சேர்ந்த ராசைய்யா அசோக்குமார் வயது 42 என்ற ஆகிய இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
கல்முனை பொலிஸாரும், சவளக்கடை பொலிஸாரும் இணைந்து இவர்களது சடலங்களை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
15 minute ago
40 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
40 minute ago
48 minute ago